ஒர்க் அவுட் பண்ணி கிக் ஏத்திட்டான்.. 10 தடவை அது நடந்துச்சு, போட்டுடைத்த பிரியா பவானி சங்கர்..!

Author: Vignesh
16 December 2023, 2:00 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

priya bhavani shankar - updatenewse360

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர் ஜிம்மில் ஒரு பையன் மீது கிரஷ் இருந்ததாகவும், ஒர்க் அவுட் பண்ணி கிக் ஏத்திட்டான், ஒன்றரை வருடம் அவனை 10 முறை பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியது கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார். இப்படியொருவரை கல்யாணம் பண்ணனும் என்று சின்ன வயது ஆசை இருந்தது. ஊர் பக்கம் இருக்கும் மில் ஓனர், நல்ல ஒரு எஸ்யூவி கம்பீரமா ஓட்டிக்கிட்டு, விட்ல மீன் கொழம்பு வெச்சிகிட்டு, மாமியார் கூட சீரியல் பார்த்துக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கணும் என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்து உள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…