எப்போ அடிக்கணுமோ அப்போ அடிப்பார் : ரஞ்சித் குறித்து நடிகை பளிச்!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2024, 6:27 pm
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 2 வாரங்களில் முக்கியமான 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.
இதனால் அடுத்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. முக்கியமாக பெண்கள் தனி குரூப்பாக செயல்பட்டு வருவதால் பார்வையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகர் ரஞ்சித் குறித்து அவரது மனைவி பிரியாராமன் பேட்டி கொடுத்துள்ளார்.
ரஞ்சித்துக்கு ஆர்வக்கோளாறு எல்லாம் இல்லை.. எந்த நேரத்தில் அடிக்கணும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.
மேலும் ரஞ்சித் – ஜாக்குலின் தந்தை மகளாக நடித்தது குறித்து பெருமையாக நடிகை பிரியாராமன் பேசினார்.