அந்தப் படத்துல நடிச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்.. லாரன்ஸ் எங்கிட்ட.. கண்ணீர் விடும் பிரபலம்..!

Author: Vignesh
27 June 2023, 2:45 pm

முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011ம் ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி என பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.

காஞ்சனா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார்.

kanchana-updatenews360

அதாவது அவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை சாதாரணமாக போய்க்கொண்டு இருந்ததாகவும், ஆனால் காஞ்சனா படத்தின் பின் பலரும் தான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைத்து வருவதாகவும், அந்த படத்திற்குப் பின் தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

kanchana-updatenews360

மேலும் லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறியதாகவும், ஆனால் ஒரு மாற்றமும் தற்போது வரை நடக்கவில்லை என்று திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…