ஞானவேல் ராஜாவை தொடர்ந்து அமீரை அசிங்கப்படுத்திய பிரியாமணி – பாவம்யா மனுஷன்!

Author: Shree
27 November 2023, 8:58 pm

தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகம் ஆன கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை வியந்து பார்க்க செய்தது.

இப்படத்தில் பருத்தி வீரன் – முத்தழகு காதல் முரட்டுத்தனமாக அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் அமீர். இருந்தே பருத்திவீரன் மீது காதல் கொண்டு இருந்த முத்தழகு, வளர்ந்ததும் பல முறை அவளுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் பருத்திவீரன் அவளை தவிர்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு முத்தழகு வீட்டார் எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள்.

ameer director

இதில் பிரியாமணியின் மிகச்சிறந்த நடிப்பிற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சமீப நாட்களாக பருத்திவீரன் பிரச்சனை கோலிவுட்டில் தலைவிரித்து ஆடுகிறது. ஆம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் இதுநாள் வரை தன்னால் மீண்டு வரமுடியவில்லை என குற்றம் சாட்டினார். ஆனால் சூர்யா கூட தன்னிடம் பணம் இல்லை என கைவிரித்துவிட்டு படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா என சொல்லிவிட்டு போய்விட்டாராம். அதன் பின் அமீர் கடன் வாங்கி படத்தை வெளியிட்டதாக பலர் அமீருக்கு ஆதரவு அளித்தனர்.

இப்படியான நேரத்தில் ஞானவேல் ராஜாவை தொடர்ந்து நடிகை பிரியமா மணி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அமீர், பருத்திவீரன் படத்தின் போது பிரியாமணி ஒரு நாள் கோபப்பட்டு சென்றார். அன்றிலிருந்து இன்று வரை அவர் என்னிடம் ஒரு போன் கூட பேசியது இல்லை. அவ்வளவு ஏன் தேசிய விருது வாங்கிய போது கூட எனக்கு போன் செய்யவில்லை என ஆதங்கத்துடன் அமீர் பேசியுள்ளார். இப்படி அமீர் தனக்கு நேர்ந்த அவமானங்களை தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார். அவருக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!