அது நடந்துட்டா ஹீரோயினா இருக்குறதுக்கு தகுதியே இல்ல.. நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!
Author: Vignesh6 February 2024, 3:45 pm
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.
இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .
இதனிடையே, முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். அண்மையில் கோடா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு மவுஸ் குறைவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியாமணி,
தற்போது, அந்த மாதிரி எல்லாம் கிடையாது, முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால், ரசிகர்கள் குறைந்து விடுவார்கள். மேலும், திருமணம் முடிந்து விட்டால் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை என்ற எண்ணம் தான் நிலவி வந்தது. அதுமட்டுமின்றி, திருமணம் ஆன நடிகைகள் படத்தில் அண்ணி, அம்மா ரோலில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இப்போது அந்த மாதிரியெல்லாம் இல்லை. திருமணமான நடிகைகள் பிசியாக நடித்து வருகின்றனர். என்னுடைய கணவரால் தான் இப்போதும் நடிக்க முடிகிறது. என்னுடைய கணவர் நான் சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.