40 வயதான ஆண்களை அப்படி சொல்லவே மாட்டாங்க… பெண்களை மட்டும் – கொதித்தெழுந்த பிரியாமணி!

Author: Shree
12 October 2023, 11:07 am

கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.

இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .

இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். அண்மையில் கோடா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட வயது ஆகிவிட்டால் நடிகைகளுக்கு மவுஸ் குறைவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியாமணி,

ரசிகர்களின் பார்வை தான். நடிகைகளாகிய நாங்கள் எப்போதும் இளமையாக கன்னம் சுருங்காத கவர்ச்சி காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? நாங்களும் மனுஷங்க தானே? எங்களுக்கும் வயசாகும்ல. ஒரு பெண்ணுக்கு வயசு 40 ஆகிவிட்டால் ஆண்டி, கிழவி என்றெல்லாம் கேலி செய்கிறார்கள். இதுவே ஒரு ஆணுக்கு 40 வயதானால் அவரை யாரும் அங்கிள் என்று அழைப்பதே இல்லை என கூறி வருத்தப்பட்டார். ஆடியன்ஸின் இந்த பார்வை எப்போது மாறுகிறதோ. அப்போதான் திறமையான நடிகைகள் எங்களது நடிப்பை தொடரமுடியும் என அவர் ஆதங்கத்தோடு கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 340

    0

    0