அட்டர் பிளாப் ஆன படங்கள்.. கணவருடன் நாட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா சோப்ராவின் Net Worth..!
Author: Vignesh18 July 2024, 4:48 pm
இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர். தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படங்கள் விளம்பரங்கள் சமூக வலைதள பதிவுகள் சொந்த தொழில் என பல வகையில் சம்பாதிக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூபாய் 669 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மில்லியன் கணக்கான டாலர்களின் சம்பளம் பெறும் இவர் ஒரு பிராண்டுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது விளம்பரப்படுத்த குறைந்தபட்சம் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வணிகங்கள் மற்றும் முக்கிய பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதை தவிர பிரியங்கா தனது சொந்த ஹேர் கேர் நிறுவனத்தை அணுமாலி என்ற பெயரில் நடத்தி வருகிறார். பிரியங்கா சோப்ரா நியூயார்க் நகரில் சோனா என்ற இந்திய உணவகத்தில் ஒரு பார்ட்னராகவும் உள்ளார்.