உன்ன விட்ட எனக்கு யாரு இருக்காங்க?… மனம் திறந்த VJ பிரியங்கா..! (வீடியோ)
Author: Vignesh27 February 2023, 2:30 pm
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி எக்கச்சக்க வரவேற்பை பெற்ற இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதில் இவரது சகோதரர் ரோஹித்தின் மகள் ”இஹா சியா” பாபுவுடன் இணைந்து ஒரு க்யூட்டான ரீல்ஸ் எடுத்து பதிவு செய்துள்ளார். இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.