அப்போ கூல் சுரேஷ்.. இப்போ தனுஷ் ரசிகர்.. என்னோட அந்த இடத்தை பிடித்து.. பகீர் கிளப்பும் VJ ஐஸ்வர்யா..!

Author: Vignesh
5 January 2024, 5:43 pm

நடிகர் மன்சூர் அலிகான் சரக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜே ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டு நடிகர் கூல் சுரேஷ் செய்த அலப்பறை சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம், பெரும் சர்ச்சையாக வெடித்த வெடித்தது.

உடனே, சுதாரித்துக் கொண்ட நடிகர் கூல் சுரேஷ் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது நடந்த கேப்டன் மில்லர் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், தனுஷ் தன் மகன்களோடு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடியும் போது ஒரு இளைஞர் கேப்டன் மில்லர் படத்தில் சிறு ரோலில் நடித்த நடிகை விஜே ஐஸ்வர்யா ரகுபதியிடம் அத்துமீதி இருக்கிறார். இதனால், நடிகை ஐஸ்வர்யா ரகுபதி கோபத்தில் அந்த இளைஞரை பிடித்து காலில் விழ வைத்து அடித்து அனுப்பி இருக்கிறார். அந்த இளைஞர் பற்றி விபரம் தெரியாத நிலையில், அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், தனக்கு என்ன நடந்தது என்ற விளக்கத்தையும் ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ளார். கூட்டத்தில் இருந்த ஒருவன் தன்னிடம் தவறான முறையில் தொட்டான். உடனே அவனைப் பிடித்து அடித்ததும் தப்பி ஓட முயன்றான். நான் கத்தி கூச்சலிட்டு அடித்தேன். ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியில், எவ்வளவு துணிவு இருந்தால் பெண்ணின் உடலை தொடக்கூடிய தைரியம் அவனுக்கு ஏற்பட்டிருக்கும். என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருந்தார்கள். என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியும் என்றும் இவனைப் போல் சிலர் இருப்பதால் அச்சமாக இருப்பதாகவும் விஜே ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?