ஆசையாய் கேட்ட சரத்குமாரின் மகன்; அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஒருமையில் விளாசித்தள்ளிய ராதிகா..!

Author: Vignesh
9 January 2024, 5:41 pm

விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் வடிவேலு குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ஒரு மேடையில் பேசிய ராதிகா வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு முறை விமானத்தில் அவரை சந்தித்தேன்.

அப்போது, அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிய போது என் மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க என் அப்பவுடன் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான். ஆனால், அவரோ சிரித்துக்கொண்டு, அரசியல்வாதிகெல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை பா என்றார்.

vadivelu

இவர் வாழ்க்கை கொடுக்கிறாராம். இப்ப நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம். சரத்குமார், விஜயகாந்த், பிரபு இருந்தால் தைரியமாக நான் ஷூட்டிங் செல்வேன். ஏனெனில், அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஒரு பிரச்சனை என்றால், முன்னே வந்து நிற்பார்கள் என்று ராதிகா சரத்குமார் வடிவேலு மீது ஆத்திரத்தை கொட்டியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!