தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை.
பின்னர் தினேஷ் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது பிரிந்து சென்ற மனைவி ரக்ஷிதா குறித்து பல முறை பேசியிருக்கிறார். தினேஷ் எப்படியாவது ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையை தான் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். அதன் வகையில் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் ரக்ஷிதாவை சந்தித்து மீண்டும் சேருவது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது.
ஆனால் ரக்ஷிதா அவருடன் சேர்ந்து வாழும் எண்ணத்திலே இல்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கணவர் இல்லாமல் வாழும் பெண்கள் குறித்து அவர் பேசியதாவது, கணவர் இல்லை என்றால் எப்போதும் அழுது கொண்டே கவலையுடன் இருக்க வேண்டும் என்பது விதி அல்ல. பிடிக்காத ஒரு நபருடன் தொடர்ந்து வாழ்வதுதான் வேதனையானது. உடனடியாக ஒரு முடிவு எடுத்து அவரை பிரிந்து விட்டு மகிழ்ச்சியாக இருப்பது எந்த குற்றமும் இல்லை என தனது கருத்தை தைரியமாக முன்வைத்துள்ளார்.
ரக்ஷிதா தற்போது கன்னட படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது, கிளாமர் ஆடை அணிந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது, மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, தன் கணவர் தினேஷ் பெயரை கையில் டாட்டு குத்தியதை அழித்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு டாட்டூவை பதித்து இருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.