கல்யாணம் பண்ணி அந்த தப்பை பண்ணிட்டேன்.. சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா ஓபன் டாக்..!

Author: Vignesh
23 September 2023, 4:20 pm

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ராதா, ஏற்கனவே ஒருவருடன் தொடர்பில் இருந்து பின் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார். இதனிடையே, நடிகர் முரளி நடிப்பில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிரவல்ஸ்.

செந்தில்குமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக ராதா நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தான் சினிமாவிற்கு வந்த போது அட்ஜஸ்ட்மென்ட் அது போன்ற பிரச்சனைகளை வந்ததில்லை எனவும், இளம் வயதில் தான் நிறைய தவறு செய்ததாகவும், தன்னுடைய லட்சியம் நடிப்புதான் என்றும் தெரிவித்திருந்தார்.

radha-updatenews360

அப்படியே, அதை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஐக்கியமானது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், தன் கேரியரை திருமணத்தால் இழந்து விட்டதாகவும், தன்னை புரிந்து கொண்டவரை நான் கணவராக தேர்வு செய்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்.

உங்களுடைய தொழில், சினிமா துறை எப்படிப்பட்டது போன்றவற்றை நன்றாக அறிந்து, தெரிந்து, புரிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் வாழ்க்கை துணையாக ஏற்க வேண்டும்.

அப்படி தேர்வு செய்ய முடியவில்லை… நீங்கள் தனியாகவே இருந்து விடுங்கள்.. நீங்கள் நீங்களாகவே இருந்துவிடுங்கள்.. அதற்காக திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று கூற வில்லை என்றும், திருமணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இப்படி செய்தால், தர்ம சங்கடமான சில விஷயங்களை தவிர்க்கலாம் என்று நடிகை ராதா அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

  • Suriya Act in Luck Bashkar Directors Next Movieலக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
  • Views: - 332

    0

    0