நடிகருக்கு நரபலி கொடுக்குறாங்க… தெலுங்கு சினிமாவின் மோசமான முகத்தை கிழித்த நடிகை!

Author: Rajesh
23 February 2024, 7:34 pm

வேலூரை சொந்த ஊராக கொண்ட தமிழ் நடிகையான ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர். இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலம் ஆனார்.

குறிப்பாக மாய நதி இன்று மார்பில் வழியுதே பாடல் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. சமீபத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரும் சேர்ந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தில் ராதிகா ஆப்தே கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.கவர்ச்சி காட்சிகளில் மிகவும் தாராளமாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஹாலிவுட் படங்களில் நிர்வாணமான காட்சிகளில் தயங்காமல் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், எந்த மொழியில் நீங்கள் நடிக்கும்போது கஷ்டமாக இருந்தது என கேட்டதற்கு, மொழியை விடுங்க…..நான் தமிழ் , தெலுங்கு ,மராட்டி , மலையாளம் , போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், நான் நடித்ததில் மோசமான சினிமா துறை என்றால் அது தெலுங்கு சினிமா தான் என வெளிப்படையாக கூறினார்.

Radhika Apte - updatenews360

காரணம் தெலுங்கு ஹீரோக்களை அங்குள்ள மக்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் கட் அவுட் முன்பு எருமை மாட்டை வெட்டி பலியிடுகிறார்கள். மனதிற்கு பயத்தை கொடுக்கும் வகையில் வெறித்தனமான ரசிகர்கள் தங்களின் மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சம்மந்தப்பட்ட ஹீரோக்களே அதை பார்த்து பெருமையாக நினைப்பது தான் காலக்கொடுமை என கரித்துக்கொட்டினார் ராதிகா ஆப்தே.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 272

    0

    0