தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோயின் ஆகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகை ராதிகா சரத்குமார். திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தன் தனித்துவமான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இவர் 80 மற்றும் 90க்களில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் , மோகன் போன்ற பல தவிர்க்க முடியாத ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து. முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படி பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி இடத்தை பிடித்திருந்தார்.
80ஸ் முதல் 90 காலகட்டம் வரை கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு அக்கா, அம்மா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ராதிகா சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான புதிதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் , அதன் பின்னர் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்ததாகவும் பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
பிரபல இயக்குனரும் நடிகரும் ஆன சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் நடிகர் ராதிகா குறித்து பேசும்போது, கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவை ஹீரோயினாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாரதிராஜா தான். ஆனால். அந்த சமயத்தில் பத்திரிக்கையாளராக இருந்த என்னிடம் இயக்குனர் பாரதிராஜா இந்த திரைப்படத்தின் ஹீரோயின் ராதிகா என்று பெயர் மட்டும் போடுங்கள். அவரது புகைப்படத்தை தயவு செய்து போடாதீங்க என்று சொன்னார் .
காரணம் அப்போது அவர் பார்க்கவே குண்டாக ஹீரோயினுக்கு ஏற்ற முக ஜாடையே இல்லாமல் இருந்தார். அதுமட்டுமில்லாமல் மேட்டுப்பாளையத்தில் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருந்த போது அங்கு ராதிகாவை பார்த்த பல பேர் பாரதிராஜாவுக்கு ஏன் இப்படி ஒரு தேவையில்லாத வேலை? அப்படி என்ன இந்த ஹீரோயினிடம் இருக்கிறது? என்றெல்லாம் கிண்டல் கேலி பேசினார்கள்.
இப்படித்தான் நடிகர் ராதிகா ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு அதன் பிறகு 40 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகவும் நேர்த்தியாக நடிக்கும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக ராதிகா தனக்கென தனி இடத்தையே சினிமாவுலகில் பெற்று புகழ்பெற்றவர் ஆக இருந்தார் என சித்ரா லக்ஷ்மணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.