ஆட்டிக்கிட்டே இருக்கணும்.. இல்லன்னா.. தனது சீக்ரெட்டை வெளியிட்ட ராதிகா..!

Author: Vignesh
5 September 2023, 10:00 am

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு , அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. நடிகை ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார். அத்துடன் இவர் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 100 – 120 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

sarathkumar-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய ராதிகா பொதுவாக தமிழ் சினிமா துறையில், இந்த சமூகத்தில் காலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லன்னா பொதச்சிடுவாங்க என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் தன்னுடைய இருப்பை நினைவூட்டி கொண்டே இருக்கும் விதமாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாக ராதிகா தன்னுடைய சீக்ரடாக தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu