சுடுதண்ணி மூஞ்சிலே ஊத்திட்டா… வரலக்ஷ்மிக்கும் அது நடந்துச்சு – பகீர் கிளப்பும் ராதிகா!

Author:
1 September 2024, 11:11 am

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான ஹீரோயின் ஆகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தன் தனித்துவமான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

radhika - updatenews360.jpg 2

இவர் 80 மற்றும் 90க்களில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் , மோகன் போன்ற பல தவிர்க்க முடியாத ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து. முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படி பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி இடத்தை பிடித்திருந்தார்.

80ஸ் முதல் 90 காலகட்டம் வரை கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு அக்கா, அம்மா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ராதிகா நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அனுபவத்தை பற்றி பேசி பகீர் கிளப்பியிருக்கிறார்.

Radhika

கேரளாவில் இந்த விஷயம் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் வெளியில் வந்துள்ளது. ஆனால் தமிழ் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது. இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டுமானால் அனைவரும் அமர்ந்து ஒன்றாக இது குறித்து பேச வேண்டும்.

சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இது போன்ற பாலியல் சுரண்டல்கள் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைத்து பெண்களும் தைரியம் ஆனவர்கள் கிடையாது. ஆனால், பெண்கள் மிகவும் வலிமையாக இந்த விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் .

நான் சினிமாவில் அறிமுகமானபோது அப்பாவித்தனமாக இருந்ததால் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தபோது அதிலிருந்து வெளிவரும் தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக நான் வளர்த்துக் கொண்டேன். இதே போன்ற பிரச்சனை நடிகை வரலட்சுமி சரத்குமாரும் எதிர்கொண்டு இருக்கிறார். அவர் அதைப் பற்றி தைரியமாக வெளியில் வந்து குரல் கொடுத்தார்.

varalakshmi sarathkumar-updatenews360

அதுமட்டுமில்லாமல் கேரவனில் ரகசிய கேமராக்கள் வைக்கப்படுகிறது. நடிகைகள் துணி மாற்றுவதை கேரவனுக்குள் வீடியோ எடுத்து படம் பிடித்து வெளியிடுறாங்க. இது பல வருஷமா நடக்கிறது. எனவே நான் கேரவனில் கேமரா இருக்கா அப்படின்னு எப்பவுமே சரி பார்ப்பேன்.

ஒருமுறை திருப்பதியில் என்னோட தோழி ஒரு நடிகைக்கு இது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. அவர்களை ஜன்னல் மூலமா எட்டி பார்க்க முயற்சி பண்ண ஒரு நபர் மீது அவர் சுடுதண்ணி எடுத்து மூஞ்சிலேயே ஊத்தினால். சீனியர் நடிகைகளின் இது போன்ற தைரியமான செயல்களை பார்த்து தான் எதையும் எதிர்கொள்ள தயார் ஆனேன் என ராதிகா கூறியிருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 312

    0

    0