‘மால டம் டம்.. மங்கள டம் டம்.. காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..தேதியுடன் வெளியான கல்யாண அறிவிப்பு..!
Author: Vignesh1 January 2024, 2:41 pm
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.
இந்நிலையில், இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இதற்கு பதில் அளித்த நடிகை ரகுல் பிரித் சிங் தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவதாகவும், பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான் தன்னுடைய காதலை முன்பே கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தான் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என வதந்திகள் பரவியதாகவும், தற்போது மீண்டும் தனக்கு திருமணம் நடந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதாகவும், தனக்கு இணையவாசிகளே இரண்டு முறை திருமணம் செய்து விட்டார்கள் என கூறி இருந்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் – Jackky Bhagnani-னுக்கு ரசிகர்கள் தற்போதே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.