47 வயதில் நடிகை ரம்பாவுக்கு வந்த ஆசை…. அதிரடி முடிவு ஆசையை தீர்க்குமா?

Author: Shree
1 November 2023, 5:17 pm

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம். தனது 47வது வயசில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்க உள்ள ரம்பா ” என் வயதுக்கு ஏற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். தற்போது அதற்கான கதைகளையும் கேட்க ஆரம்பித்துள்ளேன் என ரம்யா கூறியுள்ளார். இந்த வயசில் ரம்பாவின் இந்த ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ