விஜய் – ரம்பா சந்திப்புக்கு இதுதான் காரணம்.. அவரே வெளியிட்ட பதிவு..!
Author: Vignesh25 July 2024, 2:44 pm
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டு கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக உள்ளார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில், நடிகர் விஜயின் லேட்டஸ்ட் கிளிக் சமீபத்தில் வெளியானது. அதாவது, நடிகர் விஜயுடன் நடிகை ரம்பா குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். விஜய் உங்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்திப்பது சந்தோஷம் என்று அதில் ரம்பா கூறி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் த்ரிஷாவின் பெயர் எப்படி அடிபட்டதோ அதேபோல் தற்போது, ரம்பாவின் பெயரும் அடிபட்டு வந்தது. இப்படியான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அடிபட்டு இருக்கையில், தற்போது ரம்பா விஜயை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதில் நான் விஜயின் மேனேஜருக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் விஜயை சந்திக்க ஆசைப்படுவதாக கூறினேன். விஜயும் எங்களுக்காக மூன்று மணி நேரத்திற்கு மேலாக நேரம் ஒதுக்கினார். எனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் பேசினார். எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான் அவருடன் நடித்த காலங்களில் மிக குறைவாகவே பேசுவார். எனது மகன் லியோ படம் பார்த்த பின்னர் விஜயின் ரசிகனாக மாறிவிட்டார். அதனால் தான் விஜய் சந்தித்தோம் விஜய் அரசியலுக்கு வரும் முடிவு மிகவும் தைரியமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.