கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் மகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்….!

Author: Vignesh
1 November 2022, 1:00 pm

90களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், சல்மான் கான், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்தவர். அவர் கனடாவில் வசிக்கும் தொழில் அதிபரான இந்திரனை திருமணம் செய்து கொண்டு அங்கு செட்டில் ஆகிவிட்டார். ரம்பாவுக்கு லாவண்யா, சாஷா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 2018ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

rambha-updatenews360

ரம்பாவின் பிள்ளைகள் கனடாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள். அவர்களை அழைத்து வர காரில் பள்ளிக்கு சென்றார் ரம்பா. பிள்ளைகளுடன் வீடு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் ரம்பா, குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

rambha-updatenews360

ரம்பாவின் இளைய மகள் சாஷாவுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனை புகைப்படம் மற்றும் சேதமடைந்த காரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, விபத்து குறித்து தெரிவித்துள்ளார் ரம்பா. அவரின் கார் மீது மற்றொரு கார் மோதியிருக்கிறது.

rambha-updatenews360

ரம்பாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். சாஷா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். நல்ல வேளை யாருக்கும் படுகாயம் இல்லை என்று பிரபலங்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 521

    0

    0