கணவரிடம் ஆட்டம் காட்டிய ரம்பா.. ஜீவனாம்சம் மாதம் ரூ2.5 லட்சம் -இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்தாராம்..!

Author: Vignesh
6 September 2023, 10:26 am

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

rambha - updatenews360

இதனிடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிய முடிவெடுத்த ரம்பா, விவாகரத்து கோரி இருந்தார். அந்த வழக்கில், தன்னுடைய கணவருக்கு தொழிற்சாலை உள்ளது. மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதி வருகிறார். தன் மூத்த மகளின் கல்வி, இளைய மகளின் மருத்துவ செலவுகளுக்கும், பராமரிப்புக்கும் பணம் தேவை.

தனக்கும் சினிமா வாய்ப்பு இல்லை என்றும், எனவே தங்களின் பாராமரிப்புக்கு மாதம் ரூ.2.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அப்போது, இருவரும் சமரசம் செய்யுமாறு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார். அதை ஏற்றுக் கொண்டு இருவரும், அதன் பின் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன் பின்னர் கணவருடன் இணைந்த ரம்பாவிற்கு, மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

rambha-updatenews360
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?