ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியே அலுத்துப்போன நீலாம்பரி… அந்த படம் தான் வேற மாறி மாத்துச்சி!
Author: Shree16 ஆகஸ்ட் 2023, 3:30 மணி
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். தற்போது 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் அதே இளமையோடு அழகாக இருக்கிறார். இவர் 2003ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
சில வருடங்கள் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்க்கை கொடுத்ததே ஐட்டம் பாடல்கள் தான் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் கேப்டன் பிரபாகரன் படத்தில் ” ஆட்டாமா தேரோட்டமா ” பாடலுக்கு செம எக்ஸ்பிரஷனோடு ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் மூலைமுடுக்கெல்லாம் ஓங்கி ஒலித்தது. அந்த பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய நடனத்தை பார்த்து விஜயகாந்தே மெர்சல் ஆகிவிட்டாராம். அதன் பிறகு அனைத்து இயக்குனர்களின் பார்வையும் ரம்யா கிருஷ்ணன் மீது விழ அவருக்கு வாய்ப்புகள் மளமளவென குவியத்துவங்கியதாம்.
ஆனால், வந்த வாய்ப்புகள் அனைத்தும் ஐட்டம் டான்ஸடாகவே கிடைத்ததாம் இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆடி ஆடி அலுத்துப்போன ரம்யா கிருஷ்ணன் அதன் பிறகு குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடி பிடித்து நடித்தாராம். இது மக்களுக்கு பிடிக்காமல் போக மார்க்கெட் சரிந்துவிட்டது. இதனால் குடும்பம் குழந்தை என அமைதியாக செட்டில் ஆகிவிட்டார். சில ஆண்டுகள் சினிமா பக்கமே வராமல் இருந்த அவர் பாகுபலி படத்தில் நடித்து மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி மளமளவென மார்க்கெட் பிடித்துவிட்டார். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில்; அவரின் மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2
1