ரீ என்ட்ரினா இப்படி இருக்கனும்… கவர்ச்சி டீச்சரா காலேஜ் பசங்களை கட்டி இழுத்த சூர்யா பட நடிகை!
Author: Shree14 July 2023, 5:05 pm
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. ன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் இந்த இரண்டு படங்களும் மாபெரும் ஹிட் அடித்து அவருக்கு மார்க்கெட் உருவாக்கியது.

ஆனாலும் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்தார். இதையடுத்து கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்திருந்தார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆம், தற்போது 40 வயதாகும் ரம்யா கன்னட மொழியில் உருவாகியுள்ள “ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே” என்ற படத்தில் கல்லூரி ஆசிரியராக அதுவும் கவர்ச்சி டீச்சராக நடித்து மயக்கியுள்ளார். அப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழ் படங்களில் அடக்கமான நடிகையாக நடித்த ரம்யாவா இப்படி என எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்: