இத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரரா நடிகை ராஷி கண்ணா .? வெளியானது தகவல்..!

Author: Rajesh
3 April 2022, 1:42 pm

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அவருக்கு மட்டுமே சுமார் ரூ. 37 கோடி சொத்து மதிப்பு இருக்கின்ற தகவல் வெளியாகி ரசிகர்கழள வாய்பிளக்க வைத்துள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1675

    6

    0