பார்ட்டியில் பிரபல நடிகருடன் உரசிய ராஷ்மிகா : காட்டிக்கொடுத்த லைவ் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 6:00 pm

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏராளமான ரசிகைகளை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி படங்களில் நடித்த இவர், நோட்டா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தற்போது லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், ராஷ்மிகா மந்தனா உடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.

rashmika mandanna - updatenews360.jpg 3

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்ததால், இவர் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த இவர்கள், கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களுக்கு பின் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வந்தனர்.இருப்பினும் இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, இவர்கள் குறித்த காதல் சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கியது.

rashmika mandanna -updatenews360

ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்பட்டது. அப்போது மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் விஜய் தேவரகொண்டா ஒரு புகைப்படத்தை கூட பதிவிடவில்லை. இருப்பினும் ராஷ்மிகா பதிவிட்ட புகைப்படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை அணிந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விஜய் தேவரகொண்டா பதிவிட்ட புகைப்படம், ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும், மாலத்தீவுக்கு ஜோடியாக சென்றதை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கையில் சரக்கு பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் குளித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் புத்தாண்டு பார்ட்டியில் ராஷ்மிகா லைவ் வீடியோவில் வந்து ரசிகர்கள் உடன் பேசி இருந்தார். அப்போது வாரிசு உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசினார்.உங்க வயசு என்ன என ஒரு ரசிகர் ஒருவர் கேட்க, 26 வயது என ராஷ்மிகா பதில் அளிக்கிறார். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஒரு நபரின் குரல் கேட்கிறது.அது விஜய் தேவரகொண்டாவின் குரல் தான். இதை வைத்து அவர்கள் இருவரும் ஜோடியாக புத்தாண்டு பார்ட்டிக்கு சென்று இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 633

    3

    1