பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளிவான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.
அதன் பிறகு தெலுங்கில் சாலோ திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நேரடியாக ஹீரோயினானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாக வெளிவந்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அந்தப் பதிவில் தான் ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கி விட்டதாகவும் இதனால் மருத்துவரின் அறிவுரையின்படி வீட்டில் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாகவும் கூறி வருகிறார்கள்.
மேலும் இது பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கும் ராஷ்மிகா மந்தனா நாளைக்கு இருப்போமா என்பதே நமக்கு தெரியாது. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான நாளை தேர்ந்தெடுங்கள் என மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அதையடுத்து ராஷ்மிகாவுக்கு என்ன ஆனது என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி அவருக்கு ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.