நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்த பிறகு ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது. தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதியான நாளை இந்தியில் வெளியாக இருக்கும் “குட் பை” என்ற திரைப்படத்தில் அமிதாபச்சன் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்மிகா பேட்டியாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் வாழ்நாளில் கடந்து வந்த சோகமான நிகழ்வுகள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நம்மை மீறிய செயல்கள் நடக்கும். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அது சாத்தியம் கிடையாது. அந்தவகையில் எனது வாழ்க்கையில் சோகமான விஷயங்கள் பல நடந்துள்ளன.
எனது நடிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை பற்றி கூறுகிறேன். ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தேன். இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும். கதைக்கு தேவை என்பதால், அதுபோல் கிஸ் கொடுத்து நடித்தேன். படம் வெளியான பிறகு, ரசிகர்கள் என்ற போர்வையில் பலபேர் என்னை சமூக வலைத்தளத்தில் இழிவாகப் பேசினார்கள். தரக்குறைவாக விமர்சித்தார்கள்.
அதற்கெல்லாம் இந்த முத்தக்காட்சியை காரணம் காட்டினார்கள். அதை எல்லாம் நான் படித்துவிட்டு மிகவும் அப்செட் ஆனேன். வீட்டிலுள்ள எனது அறைக்கு ஓடிச்சென்று, படுக்கையில் அழுதபடி கிடப்பேன். இதற்கு முன்பு யாருமே இது போன்ற காட்சியில் நடிக்கவில்லையா? என்னை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள் என்பது புரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்வேன். இப்போது எனக்குள் தைரியம் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட எதிர்மறை கருத்துகளையும் இப்போது கையாள தெரிந்துகொண்டேன். அதைஎல்லாம் நான் பேசாமலே கடந்து செல்கிறேன். அதனால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.