நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .
ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பான “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் .
அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யுடன் தான் நடிப்பேன் என்றும், அவரை எனக்கு பிடிக்கும் என்றும் அவருடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகவும் ரவீனா தாஹா கூறியதாக வைரலானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன். அதை எல்லோரும், சஞ்சய் ரவீனாவை டேட் பண்றாங்க, டேட் பண்ணனும்னு ஆசைன்னுலா போட்டுட்டாங்க என்று ரவீனா தாஹா புலம்பியிருக்கிறார் .
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணியுடன் காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில், பிக் பாஸ் முடிந்த நிலையில், மணியை கழட்டிவிட்டு ரவீனா தற்போது குட்டையான கவர்ச்சி ஆடை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார். அதே ஆடையில் எல்லை மீறியபடி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.