இவ்வளவு பெரிய மகன் இருந்தும் ஸ்லிம் ஃபிட்டாக இருக்கும் ரீமா சென்.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
5 January 2024, 2:22 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் நடிகை ரீமா சென் அறிமுகமானர். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகை ரீமா சென் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

இவருக்கு கடந்த 2012 -ம் ஆண்டு தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குடன் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.

reema sen -updatenews360

எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

reema sen -updatenews360

இந்த நேரத்தில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்தபோது, அந்த படத்தில் படுக்கை அரை காட்சியில் நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.

முன்னதாக, எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஸ்லிம் ஃபிட்டாக இருக்கிறீர்களே இவ்வளவு பெரிய பையனுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?