என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் அமிதாப் பச்சன் கள்ளக்காதல் – ரகசிய உறவு அம்பலம்!
Author: Shree21 August 2023, 9:41 am
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஆம் பாலிவுட்டின் பிரபல நடிகையும் ஜெமினி கணேசனின் மகளுமான நடிகை ரேகாவை அமிதாப் பச்சன் காதலித்து வந்ததாகவும் அவர்கள் இருவரும் ரகசிய உறவில் இருந்த டேட்டிங் புகைப்படங்களும் ஆதாரத்துடன் வெளியாகி அதிர வைத்துள்ளது.
அமிதாப் பச்சன் தனது காதல் மனைவி ஜெயாவை ஏமாற்றி நடிகை ரேகாவுடன் உறவில் இருந்ததாக பூதாகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இதனை மனைவி ஜெயா பச்சன், ” என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்” என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று வரை பாலிவுட்டின் மிகச்சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.