53 வயதில் கர்ப்பமாக இருக்கும் ரேகா..- வெளியான பேபி பம் புகைப்படம்..!
Author: Vignesh30 June 2023, 6:30 pm
90 காலகட்டங்களில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு படங்களை நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து வெளியேறி சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர் தற்போது மீண்டும் கதாநாயகியாக வரவிருக்கிறார்.
தற்போது, அறிமுக இயக்குனர் மாலதி நாராயண இயக்கத்தில் உருவாக்கும் மிரியம்மா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் எழில்துறை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மிரியம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது அதில் ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.