TR அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்.. தினமும் அவரால.. உண்மையை உடைத்த பிரபல நடிகை..!
Author: Vignesh10 April 2023, 3:30 pm
டி. ராஜேந்திரனால் நான் அழாத நாளே கிடையாது என்று மனம் திறந்து சூர்யா பட நடிகை ரேணுகா கொடுத்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையான ரேணுகா ரஜினி உடன் நடிக்க 40 வருடமாக காத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான இவர் கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அயன், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், 40 வருஷமா நடிக்கிறீங்க, இந்த நடிகரோட நடிக்க முடியலையேன்னு வருத்தபட்டிருக்கீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
கண்டிப்பா இருக்கு. எத்தனையோ நடிகர்களோடவும் கமலோடவும் நடிச்சிருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் கூட நடிக்க முடியலையே என்ற வருத்தம் இப்பவரை என் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கு என கூறி வருந்தியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், டி ராஜேந்திரன் குறித்தும் பேசிய அவர் டி ராஜேந்திரன் கண்ணா பின்னான்னு திட்டுவார் என்றும், டயலாக் வரவில்லை என்றால் வைங்க என்று கடுமையாக திட்டிக்கொண்டே இருப்பார் எனவும், அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு நாளும் அழுதது தான் அதிகம் என தெரிவித்துள்ளார்.
ஏன் என்றால், இப்போது இருப்பது போன்று அப்போது டிஜிட்டல் கிடையாது எனவும், அப்போது பக்கத்திலேயே கிர் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் எனவும், குறிப்பாக, ராஜேந்திரன் சார் டயலாக் ஒரு முறை இருக்கும். அதே டயலாக் மறுமுறை வராது என்றும், அப்படி கஷ்டப்பட்டு பேசி முடித்து கடைசி நேரத்தில் பார்க்கும்போதுதான் தனக்கே கஷ்டமாக இருந்தது தெரியும்.
இதைவிட கூட கொஞ்சம் நல்லா நடித்து அழகா பேசி இருக்கலாம் என்று தோணியதாகவும், ஆனால், அப்போ படமே முடிஞ்சு போனது எனவும், ஆனால், டி ராஜேந்திரன் சார் வேற லெவல் குரு தான் என்றும், அவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது எனவும், அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார் எனவும், அதற்கு முன்பு தான் எட்டு வருடங்களாக நாடகங்களில் நடித்ததாகவும், தனக்கு பட்டர்பிளை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, தான் பட்டர்பிளையில் முதன் முதலாக நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இப்போதும் தன்னுடைய போட்டோ தான் அந்த விளம்பரத்தில் இருக்கிறது எனவும், அது தனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.