ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் படிக்க: அண்ணன் வரார் வழி விடுங்க.. விஜய் மீது புகார் கொடுத்து கொந்தளித்த சமூக ஆர்வலர் – என்ன விஷயம்?..
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ரேஷ்மா பசுப்புலேட்டி தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அதில் கூறியதாவது, முதல் திருமணம் என் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான் அவர் என்னை அடிமை போல் நடத்தியதால் விவாகரத்து பெற்றுக் கொண்டேன். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாக்ஸரை காதலித்த திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனேன்.
ஆனால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரிய வந்தது. ஒரு முறை எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டையில் என்னை அடித்துவிட்டார். அப்போது, நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தேன். கடுமையான வயிற்று வலி வந்தது. அப்போது, யாரும் எனக்கு உதவ முன் வராததால், நானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அதன் பிறகு குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதம் இன்குபேட்டரில் இருந்தான்.
கடவுள் என் குழந்தையை எனக்கு மீட்டுக் கொடுத்தார். இதை அடுத்து அந்த நபரை விவாகரத்து செய்துவிட்டேன். அதன் பின்னர், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துவிட்டேன். பல மருத்துவமனைகளில் பார்த்து என் பையனை சரி செய்து தினமும் அவனுக்கு பிரசியோதெரபி தர வேண்டும் என்பதால், பணத்தேவை அதிகமாக இருந்தது. இரண்டு மூன்று இடத்தில் வேலை பார்த்து சாப்பிடக்கூட எனக்கு நேரம் இருக்காது. அந்த நேரம் மிகவும் கஷ்டப்பட்டு மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்குள் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.