அவரை பதம் பார்க்கனும்.. பிரபல நடிகர் குறித்து பேட்டியில் பேசிய ரேஷ்மா.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Author: Rajesh2 April 2023, 11:19 am
தமிழில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சூரி ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடித்ததன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார். இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இதுதவிர ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி உள்ள சீதா ராமன் என்ற தொடரிலும் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை ரேஷ்மாவுக்கு சமீபத்தில் ஃபேன்ஸ் மீட் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அவர், தன்னைப் பற்றிய சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கமெண்ட்டுகள் குறித்து ஓப்பனாக பதிலளித்துள்ளார். அப்போது நெட்டிசன் ஒருவர், ‘எனக்கு உன்னை பதம் பார்க்கனும்’ என கொச்சையாக கமெண்ட் செய்தது குறித்து ரேஷ்மாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு அதெல்லாம் நடக்காத விஷயம் என சொல்லிவிட்டு, அவர் சொன்ன பதில் தான் பேச்சு பொருளாகியுள்ளது.
“எனக்கு கூட தான் ரன்பீர் கபூரை பதம் பார்க்கனும், அதை பண்ண முடியுமா, ஆலியா பட் என்னை செருப்பால அடிக்க மாட்டா, பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க, நாம நம்ம வேலைய பார்த்துட்டு போய்கிட்டே இருக்கனும்” என ரேஷ்மா கூறியதை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள், இதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். மேலும், திருமணமான நடிகர் குறித்து இப்படி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.