அயோத்தி ராமர் கோவில் திறப்பு: ஒட்டுமொத்த இந்துக்கள் குறித்து நடிகை ரேவதி சர்ச்சை பதிவு!

Author: Rajesh
24 January 2024, 8:44 am

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்து இந்திய வரலாற்றின் சாதனைகளில் ஒன்றாக முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.

Revathi - updatenews360

பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் கோடானகோடி மக்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவி திறப்பு குறித்து பதிவிட்டுள்ளார் நடிகை ரேவதி, “ஜெய் ஸ்ரீ ராம்…! இது ஒரு மறக்க முடியாத நாள். ராம் லல்லாவின் வசீகரிக்கும் முகத்தைப் பார்க்கும் போது என்னில் அப்படி உணர்ச்சி ஏற்பட்டது. எனக்குள் ஏதோ ஒரு உணர்வு கிளர்ந்தெழுந்தது.

இதில் விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.

ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்” என ரேவதி தெரிவித்து இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், சும்மா உருட்ட கூடாது. யார் உங்களை இத்தனை நாள் தடுத்தது? என பலர் நடிகை ரேவதியை விமர்சித்து கருத்து கூறி வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!