80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.
மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது Youtube சேனலில் அளித்துள்ள பேட்டியில் மௌன ராகம் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், மௌனராகம் திரைப்படம் தனது வாழ்வை மாற்றியது என்றும், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படம் மௌனராகம் படத்தின் 2ம் பாகமாக வெளியிட திட்டமிட்டதையும் குறித்து நடிகை ரேவதி பேசியுள்ளளார்.
அவர் பேசியதாவது: “1990இல் அஞ்சலி திரைப்படம் வெளிவந்து பல விருதுகளை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்ததாகவும், இந்த படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், ரேவதி, ரகுவரன், பிரபு போன்ற பலர் நடித்த இந்த மௌன ராகம் படத்தின் தொடர்ச்சியாக “மௌனராகம் 2” எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் மோகன் திரைப்படத்தில் அந்த படத்தில் நடிக்க மறுத்த காரணத்தினால், மோகனுக்கு பதிலாக ரகுவரன் படத்தில் நடித்துள்ளார் என்றும், அதனால் படத்திற்கு “அஞ்சலி” என பெயரிட்டு வெளியிட்டதாக நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
மேலும் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 2 படங்களும் பெரும் வெற்றியை அளித்து, அது தனது திரையுலக வாழ்வில் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது” என ரேவதி பேசியுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.