தமிழ் சினிமாவில் பொக்கிஷ படைப்பாளியான இயக்குனர் பாரதிராஜா கிராம வாசம் சார்ந்த பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் பல்வேறு நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். குறிப்பாக ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு சேரும். இவரிடம் உதவியாளராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்கள் பலபேர் இருக்கின்றனர்.
குறிப்பாக பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா ,சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், பொன்வண்ணன், சீமான், லீனா, மணிமேகலை உள்ளிட்ட பல பேரை பாரதிராஜா தான் அறிமுகம் செய்து வைத்தார். உதவி இயக்குனர்களாக அவரிடம் பணியாற்றியவர்கள் இன்று திரைப்பட இயக்குனராக புகழ்பெற்றிருக்கிறார்கள். பல்வேறு தேசிய விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாரதிராஜா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரேவதி பேசியுள்ளார்…. இயக்குனர் பாரதிராஜா பெரும்பாலும் தன் படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் இருந்து நடிப்பு நடிப்பு வர வைக்க கன்னத்தில் பளார் விடவும் தயங்கவே மாட்டார்.

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படித்தான் அவர் கை வைக்காத…அடிக்காத… அடிக்காமல் உயர்ந்த நட்சத்திரங்களே கிடையாது என்று சொல்லலாம் என்று சித்ரா லக்ஷ்மணன் பேட்டியில் கூற… நடிகை ரேவதி தனக்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகை ரேவதி கூறியதாவது, மண்வாசனை படத்தில் நான் முத்து பேச்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். மண்வாசனை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயங்கரமாக கத்தி பேசவேண்டும். அப்படியான காட்சியில் நான் சரியாக கத்தி பேசவில்லை என்பதால் என்னை பளார்னு அடித்து கத்து அப்படின்னு கோபமா சொன்னாரு. உடனே நான் பயங்கரமாக கத்தி விட்டேன்.
ஆனால், அவர் அடித்தது கூட எனக்கு அப்போது தோணவில்லை. காரணம் அவர் என்னை தப்பு செய்ததற்காக அடிக்கவில்லை. எனக்கு நடிப்பு வர வைக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் அப்படி செய்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் பாரதிராஜாவிடம் அடி வாங்குவதை நான் மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகத்தான் நினைக்கிறேன் என கூறினார் ரேவதி.