பொது இடத்தில் தான் துணி மாத்தணும்.. சமந்தாவுக்கே அந்த நிலைமை தான்… கதறும் பிரபல சீரியல் நடிகை..!
Author: Vignesh27 July 2023, 12:30 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக இருக்கும். இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.
சீரியல் நடிகையாகவும் டான்ஸராகவும், மேக்கப் ஆர்டிஸ் ஆகவும், திகழ்ந்துவரும் ரேமா அசோக் ஆரம்பத்தில் நடன கலைகளாக திகழ்ந்து கோவில்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று நடனமாடியும் வந்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடன கலைஞர்களுக்கு நடக்கும் அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நடன கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கோவில் நிகழ்ச்சிகளில் திருமண நிகழ்ச்சிகளில் அழைப்பார்கள் எனவும், அப்போது பாடகர்களுக்கு மட்டும் தாங்கும் இடம் உணவு உள்ளிட்ட எல்லாமே கொடுப்பார்கள். ஆனால் நடன கலைஞர்களுக்கு உணவு கொடுக்க மாட்டார்கள். ஏன் பலர் கூடி இருக்கும் பொது இடத்தில் தான் ஸ்கிரீன் கட்டி துணியை மாத்தணும், ஒரு சிறிய அறை கூட கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாடகர்களுக்கு கொடுக்கும் மரியாதை நடன கலைஞர்களுக்கு இல்லை என்றும், அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இல்லை என்றும், நடனம் ஆடினால் தங்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊ சொல்றியா மாமா, காவாலா பாடல்களை பாடிய பாடகர்களை புகழ்ந்து ஆட்டம் போட்ட பொதுமக்கள் நடன கலைஞர்களை இழிவாக தான் விமர்சிக்கிறார்கள். இந்த நிலைமைதான் சமந்தாவுக்கும் தமன்னாவுக்கும் என்றால் எங்களை போன்ற சின்ன சின்ன நடன கலைஞர்கர்களின் நிலை இதைவிட மோசமாக தான் இருக்கும் என வருத்தத்துடன் பேசியுள்ளார்.