விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.
இதனிடையே, ரித்திகா ஜீ தமிழில் மிர்ச்சி செந்தில் நடிக்க புதியதாக உருவாகிவரும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்த தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.
ஆனால் தற்போது இன்னும் ஒளிபரப்பப்படாத அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் ரித்திகா, அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை, இவரும் ஏன் விலகினார் என்பது பற்றியும் தகவல் தற்போதுவரை இல்லை.
ஆனால் ரித்திகாவுக்கு பதில் பொன்னி சீரியல் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.