நிறைமாத நிலவே வாவா… சீரியல் நடிகை ரித்திகாவின் pregnancy போட்டோஷூட் வைரல்!

Author:
15 August 2024, 5:22 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி உச்சத்தை தொட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அம்ரித்தா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. சீரியல் மட்டும் இல்லாமல் இவர் குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

இதனிடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் ரித்திகாவிற்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அதை எடுத்து ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தனது கணவர் வினு உடன் சேர்ந்து கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் .

8 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்திகாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

ரித்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன்1ல் வினோதினி என்ற கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?