எப்பவுமே ஹோம்லி லுக் தான்….. எடுப்பாய் சேலை கட்டிய ரித்விகா லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!
Author: kavin kumar8 August 2022, 4:00 pm
நடிகை ரித்விகா ( Riythvika )ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தமிழில் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “பரதேசி” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் . அதன் பின் கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் “கபாலி”,” இருமுகன்”, “சிகை” என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ரித்விகா, அரைகுறை உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது மாடர்ன் உடை மற்றும் சேலையில் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். தற்போது சேலை கட்டி போட்டோஷூட்செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.