Strong ஆன ரோலா இருக்கும் போலயே…. ரோகிணி கதாபாத்திரத்தை ரிலீஸ் செய்த “வேட்டையன்” டீம்!

Author:
28 September 2024, 5:08 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து வேட்டைய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

vettaiyan

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. முன்னதாக வேட்டையன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

அந்த வகையில் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை தற்போது படக்குழு அறிவித்திருக்கிறது. அந்த போஸ்டரில் நடிகை ரோகினி “நஹிமா” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இதில் அவரது தோற்றத்தை பார்த்தால் மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என நம்பும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!