சிவக்குமார் கூட ரொமான்ஸ் சீன்ல அந்த நடிகை.. – உண்மையை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
20 June 2023, 12:20 pm

70, 80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். தமிழ் சினிமாவில் சிவகுமார் போன்று ஒரு நடிகரை பார்ப்பது அரிது. ஏனென்றால் இவர் எந்த வித கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு சிவக்குமார் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். சினிமா பக்கம் போனா தன் மகன் பழக்கவழக்கங்கள் மாறிவிடுமோ என அஞ்சியே அவரது வீட்டார் முதலில் தயங்கி இருக்கிறார்கள். பின்னர் உறவினர் ஒருவரின் உதவியோடு சென்னைக்கு வந்திருக்கிறார் சிவகுமார்.

sivakumar -updatenews360

இவரைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது நடிப்பு என்பது சிவக்குமாருக்கு ஆவரேஜ் தான் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் கடவுள் வேஷங்கள் இதுதான் சிவக்குமாருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

sivakumar -updatenews360

ரவிச்சந்திரன் ஜெயசங்கர் இவர்களுக்கு முன்பே சிவக்குமார் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், அவர்களைப் போல் அந்த ஒரு உயரத்தை அடையவில்லை என்றும் சொல்லப்போனால் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் இவர்களுக்கு அடுத்தபடியாக சிவகுமார், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவர்கள்தான் வரவேண்டியது எனவும், ஆனால் சிவக்குமார் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

sivakumar -updatenews360

ஆனால் அவருக்கு இன்று தனி நடிப்பு திறமையும் உண்டு அதனால் தான் என்னவோ 100 படங்களுக்கு மேல் அப்போதே நடித்து விட்டார் எனவும், மக்களின் ரசனைக்கு ஆளானவர் சிவகுமார் என்றும் தெரிவித்திருக்கிறார். இவர் அடிப்படையில், ஓவியராக இருந்திருக்கிறார் என்றும், தன் உடல் மீது அதிக அக்கறை கொண்ட மனிதர் என்றும் அதனால் தான் இன்றுவரை யோகா உடற்பயிற்சி இவைகளை கற்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாராம்.

மேலும், அந்த காலகட்டத்தில் தாய்மார்கள் அனைவரும் பிள்ளைன்னு ஒன்று பிறந்த சிவக்குமார் மாதிரி பிறக்கணும் என்று சொல்வார்களாம். அந்த அளவுக்கு ஒழுக்கம் வாய்ந்தவராக சிவக்குமார் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

sivakumar -updatenews360

இந்த நிலையில், சிவக்குமார் குறித்து ஒரு கிசுகிசுவை காந்தராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது அந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட நடிகைகளுக்கு சிவகுமார் மீது ஒரு தலை காதல் இந்ததாம். அந்த சமயத்தில் ஒரு படப்பிடிப்பில் சிவகுமார் மீது ஆசை கொண்ட ஒரு நடிகை கட்டிபிடிக்கும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாராம். சிவகுமாரும் அந்த நடிகையும், இறுக்கமாக கட்டியணைக்கும் போது இயக்குனர் கட் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு பின்னர் இயக்குனரை பார்த்து ஏன் சார் அதுக்குள்ள கட் சொல்லிட்டீங்க என்று அந்த நடிகை ஏக்கத்துடன் கேட்டதாகவும், அந்த நேரத்தில் இந்த செய்தி மிகவும் வைரலாக பேசப்பட்டது என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 513

    2

    0