8-வருட திருமண பந்தம்.. “இது எல்லாம் அவர் பண்ணாம விட்டுட்டார்” – ரகுவரன் குறித்து மனம் திறந்த ரோகினி..! இதுக்காகவா இந்த முடிவு..!

நிறைய சந்தோஷமான தருணங்களை ரகுவரன் மிஸ் செய்து விட்டார் என்று நடிகையும், ரகுவரனின் முன்னாள் மனைவியுமான ரோகினி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.

ரகுவரன் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

ரகுவரன் மறைவு:

பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ரகுவரனின் முன்னாள் மனைவி ரோகினி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் ரகுவரன் குறித்து கூறி இருந்தது, எங்களுடைய மகன் ரிஷி மற்றும் ரகுவரனை சேர்த்து நான் அதிகம் போட்டோ எடுத்து இருக்கிறேன்.

ரோகினி அளித்த பேட்டி:

நானும் ரகுவரனும் ரிசியை அதிக முறை போட்டோ எடுப்போம். இந்த தருணங்கள் எல்லாம் மறக்க முடியாது. இப்போது தான் இந்த சோசியல் மீடியா உடைய பயன்பாடு அதிகம் இருக்கிறது. இந்த நேரத்தில் ரகுவரன் உடைய சின்ன சின்ன அசைவுகள், டயலாக் டெலிவரி, நடிப்பை சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதை அவர் தெரிந்திருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்.

ரகுவரன் குறித்து சொன்னது:

இந்த தருணங்களை அவர் மிஸ் செய்து விட்டார். ஒரே ஒரு சாவித்திரி, ஒரே ஒரு எஸ்.வி. ரங்கா ராவ், ஒரேயொரு சந்திரபாபு. அதே போன்று ஒரே ஒரு ரகுவரன் என நான் அடிக்கடி அவரிடம் சொல்வேன். அவருக்கு இந்த தைரியம் போதுமானதாக இல்லை. அவருக்கு இன்னும் எல்லோரும் தைரியம் கொடுக்க வேண்டி இருந்தது என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

விவாகரத்து

சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 8 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து ரோஹிணி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் அதில்..அனைவரையும் போல தங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுக்குள் எழுந்த பிரச்சனை மகனை பதித்த காரணத்தால் தான் இருவரும் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

14 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

15 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

16 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

16 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

16 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

17 hours ago

This website uses cookies.