ஷாலினி இடத்தில் இருந்திருக்க வேண்டியது இவங்களா?.. அஜித்தை இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே..!(வீடியோ)

Author: Vignesh
19 January 2024, 4:06 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் பெஞ்சமின் அஜித் குறித்து பேசி இருந்தார். அதில், திருப்பதி படத்தின் போது அஜித் கலகலன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருப்பார். ஒருமுறை படத்தின் ஹீரோயின் நடிகை சதா வந்திருப்பதை பார்த்து பெஞ்சமின் சூப்பர் பிகர் வருது பாரு என்றார். என்ன சார் என்று கூச்சத்துடன் நான் கேட்டதற்கு ஃபிகர் தானே அவங்க என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் அஜித்தா இப்படி பேசியது என்ற என விமர்சித்து இருந்தனர்.

ajith

இந்த நிலையில், நடிகை சதா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், அஜித்னா ரொம்ப பிடிக்கும் என்றும், அஜித் மீது திருப்பதி படத்தின் போது தனக்கு கிரஷ் இருந்ததாக கூறி வெட்கப்பட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 416

    0

    0