மூஞ்சியை டெரரா வச்சுட்டு.. அனிருத்தின் Daddy என்கிட்ட.. மறுபக்கத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

Author: Vignesh
7 February 2024, 6:52 pm

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான், விஜய்யின் லியோ என அடுத்ததடுத்து சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

anirudh

முன்னதாக, அனிருத் பேசிய பழைய வீடியோ சமிபத்தில் இணையத்தில் மீண்டும் வைரலானது. அதில், அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது பெறும் 19 தான் அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவிற்கு வயது 25 வயது வித்தியாசமே அவர்களின் காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தன்னை விட 6 வயது அதிகமான பெண்ணான ஆண்ட்ரியாவின் வயதே தங்களுக்கு தடையாகிவிட்டதாக அனிருத் குறிப்பிட்டிருந்தார்.

anirudh andrea - updatenews360

அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அனிருத்தின் குடும்பத்தினர் வயது அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதா என்று அனிருத்தின் காதலுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்து உள்ளனர். இந்த நேரம் இந்த காதல் எல்லாம் மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று அனிருத்தின் தந்தை அப்போதே எச்சரித்தாராம்.

இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் அடுத்ததாக இந்தியன் 2 , விடாமுயற்சி , தலைவர் 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் தான் கடைசியாக இசையமைத்த லியோ திரைப்படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனது சம்பளத்தை மேலும் சில கோடிகள் உயர்த்திவிட்டார். அதன்படி ரூ. 8 கோடி வாங்கிய அவர் ரூ. 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தி ஒட்டுமொத்த திரையுல வட்டாரத்தையே வாய்பிளக்க வைத்துவிட்டார்.

This image has an empty alt attribute; its file name is anirudh-update-news-360.jpg

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாதனா இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், அனிருத்தின் அப்பாவோடு நடித்திருக்கிறேன். அவருடைய மகன் இவ்வளவு பெரிய ஆளாக வருவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஷூட்டிங்கில் அனிருத்தின் அப்பா டெரராக மூஞ்ச வச்சிக்கிட்டு இருப்பாரு, ஆனா அவரு ரொம்பவுமே அமைதியான டைப். நான் இங்கே என்னுடைய வேலை செய்து கொண்டிருந்தால், அவர் அவருடைய வேலையை செய்து கொண்டிருப்பார். ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் செய்யாதவர் தான் அனிருத்தின் அப்பா என்று சாதனா கூறியுள்ளார்.

முன்னதாக, சாதனா தமிழ் மொழி படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 21 வருடங்களாக சின்னத்திரையிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 448

    0

    0