பாரம்பரிய படுகா உடையில் சாய் பல்லவி.. வாவ்…இப்படி ஒரு அழகா..! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 10:30 am

பாரம்பரிய படுகா உடையில் சாய் பல்லவி.. ச்ச எவ்ளோ அழகு.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்

கோயம்பத்தூர் நீலகிரி பகுதியில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. மருத்துவ படிப்பு பட்டம் பெற்ற சாய் பல்லவி, சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எவ்வித நடன பயிற்சியும் செல்லம்மல், திரைப்படங்களில் நடிகைகளின் நடனத்தை பார்த்து டான்ஸ் கற்று கொண்டவர்.

Saipallavi_Updatenews360

ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்ற இவர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வைத்து தனது எதார்த்தமான நடிப்பின் மூலம், மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி நிலையில், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Saipallavi_Updatenews360

இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த படங்கள் மட்டுமின்றி, அவர் படங்களில் ஆடும் டான்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தமிழில் தியா, NGK, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Saipallavi_Updatenews360

கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தை சேர்ந்த இவர், தன்னுடைய பாரம்பரிய உடையில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பாரம்பரிய படுகா இன உடையில் சாய் பல்லவியின் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!