என்னை அப்படியெல்லாம் பார்த்தார்கள்.. அதனால் தான் இப்படி இருக்கிறேன்..! சாய் பல்லவி

Author: Rajesh
17 July 2022, 12:20 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக வலம் வரும் சாய்பல்லவி தற்போது கார்கி படத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜு, கௌதம் ராமச்சந்திரன் எழுதியுள்ளனர். இந்த படத்தை ரவிச்சந்திரன், தாமஸ் ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்ய லட்சுமி, ஆர்.எஸ். சிவாஜி சரவணன், ஜெயபிரகாஷ், பிரதாப், சுதாகர், கவிதாலயா கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கான ஒளிப்பதிவை ஸ்ரையாண்டி பிரேம் கிருஷ்ணா அக்கட்டு மேற்கொள்ள, கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். தமிழில் உருவான இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மேற்கொண்டது. கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பாலியல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படும் தனது 60 வயதான தந்தையை குற்றம் அற்றவர் என நிரூபிக்க மகள் போராடும் கதைக்களம் தான் கார்கி.

கார்கி யாக வரும் சாய்பல்லவி, தனது தந்தயை மீட்க நீதிமன்றத்தில் போராடுகிறார். அப்போது அவரும், குடும்பத்தாரும் சமூகத்தால் மிகுந்த அவமானத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் மீறி தன் தந்தையை காப்பாற்றினாரா? என்னும் நீதிமன்ற வளாகம் சார்ந்த கதையாக இந்த படம் வெளியாகி உள்ளது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ப்ரேமம் நடித்திருந்த போது, என் டான்ஸ் வீடியோ ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிலர் Pause செய்து அதை Zoom வைத்து ஒரு மாதிரி பேசினார்கள்.

அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதனால் தன் உடையில் கவனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…