‘நா அவரை காதலிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கல’.. முதல்முறையாக காதலன் குறித்து மனம் திறந்த சாக்ஷி அகர்வால்..!

Author: Vignesh
4 January 2023, 2:30 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

sakshi agarwal - updatenews360

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

sakshi agarwal - updatenews360

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

sakshi agarwal - updatenews360

இந்நிலையில், எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடிகை சாக்க்ஷி நடித்துள்ளார். இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நான் கடவுள் இல்லை படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்து இருப்பதாகவும், அதில் வரும் பல சண்டை காட்சியில் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

sakshi agarwal - updatenews360.jpg 33

மேலும் நடிகை சாக்க்ஷி கூறுகையில், இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஒருவரை உருகி உருகி காதலித்ததாகவும், தங்கள் காலேஜில் பாய்ஸ், கேர்ள்ஸ் பேசிக்கவே கூடாது, அப்படி பேசுனதைப் பார்த்தா அவ்வளவு தான் இதனால், இருவரும் கண்ணாலத்தான் பேசிப்போம், நான் காதலித்த நபர் ஹாஸ்டலில் இருந்ததால், மாசத்திற்கு ஒரு முறைதான் வெளியில் சந்தித்து பேசுவோம் அது ஒரு அழகான காதல் என தெரிவித்துள்ளார்.

sakshi agarwal - updatenews360.jpg 25

இப்படி ஆகும்னு நினைக்கல இப்படியே நாங்கள் 4 வருடங்கள் காதலித்ததாகவும், ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இருவரும் இப்படி பிரிந்து விடுவோம் என்று தான் கொஞ்சமும் நினைக்கவில்லை என்றும், இருந்தாலும் அந்த முதல் காதல் மனதிற்குள் பசுமையாகவே இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 412

    2

    0