அந்த தப்ப தெரியாம பண்ணிட்டேன்.. கடந்த கால தவறு குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சமந்தா..!

Author: Vignesh
1 July 2024, 3:33 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

samantha - updatenews360

மேலும் படிக்க: போயஸ் கார்டன் வாசியான நயன்தாரா.. புது வீட்டில் நடத்திய NIGHT போட்டோஷூட்..!!

சமந்தா பல்லாவரத்து பொண்ணு என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார். இவர் மாடலிங் துறைக்கு வருகையில் 500 ரூபாய்க்கு பணிபுரிய தொடங்கி, இப்போது பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இப்போதும், பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சையில் இருந்தார்.

samantha - updatenews360

மேலும்படிக்க: “பச்சக் பச்சக்” என நடிகைக்கு இச் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா?..(video)

இப்போது, ஓரளவுக்கு குணமடைந்து தற்போது சுற்றுலா செல்வது போட்டோஷூட் நடத்துவது என பிசியாக இருந்து வருகிறார் சமந்தா. பிட்னஸ் பயிற்சியாளர் சேப்ரியுடன் இணைந்து டேக் 20 என்ற பெயரில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை பேசி வருகிறார். அப்படி சமீபத்தில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும், சில வகை உணவுகள் பானங்களை தவிர்ப்பது குறித்தும் பேசி உள்ளார்.

samantha - updatenews360

மேலும் படிக்க: மனிதாபிமானம் இல்லாத அமலாபால்.. இவ்வளவு மோசமானவரா? கசப்பான உண்மையை கூறிய பிரபலம்..!

அப்போது, ஒருவர் ஆரோக்கியமற்ற பிராண்டு ஒன்றில் சமந்தா விளம்பர தூதராக இருந்தது பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா கடந்த காலத்தில் அந்த தவறை செய்தது உண்மைதான் வேண்டுமென்றே செய்யவில்லை தெரியாமல் செய்த தவறு அது உண்மை தெரிந்த பிறகு அது போன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புடன் இருக்கிறேன் என்று சமந்தா பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 173

    0

    0